இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் வினாவுக்கான விளக்கமாகத் தெரிவிக்கப்படுகிறது, பிபிசியின் செய்தி சேகரிப்பு பிரிவின் இந்தக் கட்டுரையில்.

படம்
ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 850 வாக்கில்) தென் இந்தியாவில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட விசயாலயச் சோழன் எனும் மன்னர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். சோழப் பேரளுமையின் அடித்தளம் இவ்வாறு தான் நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் (கிபி 907 ஆம் ஆண்டு) சோழப் பேரளுமையில். முதலாம் பராந்தக மன்னர் அரியணை ஏறி 48 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர்வந்த, வலிமையிலா மன்னர்களால் சோழப் பேரளுமை சரியத் தொடங்கியது. கிபி 985 ஆம் ஆண்டு, முதலாம் இராசராச சோழன் அரியணை ஏறியபோது சோழப் பேரளுமை மீண்டும் எழத் தொடங்கியது. முதலாம் இராசராச சோழன் மற்றும் அவரின் மகன் இராந்திர சோழன் தலைமையில் சோழர்கள், ஆசியாவில் மிகப்பெரிய போர்படை, பொருளாதாரம் மற்றும் தமிழ்ப்பண்பாட்டு ஆற்றலாக உருவெடுத்தனர். ஒரு காலகட்டத்தில் சோழப் பேரளுமை தெற்கில் மாலத்தீவிலிருந்து வடக்கே வங்காளத்தில் கங்கை நதிக்கரை வரை பரவியிருந்தது. ரிச்சர்ட் ஈடன் தனது 'பாரசீக காலத்தில் இந்தியா (India in the Persianate Age)’ புத்தகத்தில் சோழர்கள், தஞ்சையின் மகா சோழர்கள் என அறியப்பட்டதாக குறிப்ப...