தமிழியலியக்கம்
அன்றைக்கு உலகத் தொடர்பில் இருந்த சிலநூறு தமிழர்களால் உலகை திருப்ப முடிந்தது தமிழ்நாட்டைக் கேள்வியுறவும், மலைக்கவும், தேடிவரவும். இன்றைக்கும் உறுதியாக முடியும்! தமிழ்நாட்டைப் பார்த்து வியக்கும் வகைக்கு உலகை திருப்ப. போதும் அதற்கு, தமிழ்முன்னோரின் பட்டறிவான தமிழியலைப் புரிந்து கொண்ட, வெறுமனே ஓராயிரம் தமிழர்கள். குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர் தமிழ்முன்னோர். நடப்புத் தமிழ்த்தொடர் ஆண்டு 5125. ஐயாயிரத்து நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னேமே ஓர் ஆண்டுக்கு 365 நாள் 15 நாழிகை 31 விநாழிகை 15தற்பரை என்று ஆண்டுக் கணக்கைத் தெளிவாக நிறுவியிருந்தனர் தமிழ்முன்னோர். தமிழ் மாதங்களுக்கும் மிக மிக நுட்பமான தற்பரை வரைக்குமான நேரத்தை கணித்திருந்தனர் தமிழ்முன்னோர். சித்திரை தொடங்கி மாசி வரைக்குமான மாதங்களுக்கு நாளும், நாழிகையும், விநாழிகையும் உண்டு. பங்குனி மாதத்திற்கு நாள், நாழிகை, விநாழிகையோடு தற்பரைக் கணக்கும் உண்டு. 1. சித்திரைக்கு நாட்கள் 30, நாழிகை 55, விநாழிகை 32. 2 வைகாசிக்கு நாட்கள் 31, நாழிகை 24, விநாழிகை 12. 3 ஆனிக்